• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான சமவாய சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக வருடாந்தம் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் பட்டியலானது வர்த்தமானியில் பிரசுரிக்கவேண்டியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் அதேபோன்று விளையாட்டுகளில் ஈடுபடுத்தப்படும் மிருகங்களுக்கும் ஊக்கமருந்து வழங்கப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ள மையினால் நடப்பாண்டு தொடக்கம் குதிரை விளையாட்டுகளுக்கான தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலொன்று வௌியிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான சமவாய சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் 2024‑02‑27 ஆம் திகதியிடப்பட்டதும் 2373/14 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊக்கமருந்து (தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.