• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- பின்வரும் சட்டங்களின் கீழ் ஆக்கப்பட்டதும் உரிய வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ளதுமான நியதிகள் / கட்டளைகள் / ஒழுங்குவிதிகள் என்பவற்றை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2023‑12‑31 ஆம் திகதியிடப்பட்டதும் 2364/36 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள நியதி.

* 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2023‑12‑31 ஆம் திகதியிடப்பட்டதும் 2364/37 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப் படுத்தப்பட்டுள்ள நியதி.

* 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2024‑02‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 2369/27 ஆம் இலக்கத்தைக் கொண்டதும் 2024‑03‑06 ஆம் திகதியிடப்பட்டதும் 2374/19 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள கட்டளைகள்.

* 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2024‑01‑24 ஆம் திகதியிடப்பட்டதும் 2368/24 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் (மோட்டார் வாகனத்தின் மீதான சொகுசு வரி.

* 2021 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2024‑01‑12 ஆம் திகதியிடப்பட்டதும் 2366/34 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள்.

* மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2023‑12‑08 ஆம் திகதியிடப்பட்டதும் 2361/44 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள இலக்கம் 03/2023 கொண்ட மதுவரி அறிவித்தல்.

* மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2023‑12‑31 ஆம் திகதியிடப்பட்டதும் 2364/35 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள இலக்கம் 04/2023 கொண்ட மதுவரி அறிவித்தல்.

* 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ தொழில் (ஒழுங்குறுத்துகை) சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2024‑01‑12 ஆம் திகதியிடப்பட்டதும் 2366/33 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2024‑02‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2369/42 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் என்பன மூலம் வௌிப்படுத்தப்பட்ட கட்டளைகள்.