• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மெகாவொட் 1 தொடக்கம் 5 வரை ஆற்றலில் 09 மெகாவொட் 90 சூரிய சக்தி PV முறைமை மின் நிலையங்களை பல்லேகலயில் தாபித்தல்
- 07 மெகாவொட் ஆற்றல் கொண்ட சூரிய சக்தி PV முறைமை மின் நிலையங்களை நிர்மாணிப்பத்றகான பிரேரிப்புகளை கோருவதற்கு அமைச்சரவையினால் 2023‑05‑22 ஆம் திகதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளை மதிப்பிட்டதன் பின்னர் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சாதகமான 4 கருத்திட்ட முதலீட்டாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேபோன்று கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் மீது மேலும் முதலீட்டாளர் ஒருவரின் பிரேரிப்பானது மதிப்பிடப்பட்டதன் பின்னர் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் 05 மெகாவொட் ஆற்றல் கொண்ட சூரிய சக்தி PV முறைமை மின் நிலையமொன்றை நிர்மாணிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மொத்த ஆற்றலான 09 மெகாவொட் கொண்ட சூரிய சக்தி PV முறைமை மின் நிலையங்களை நிர்மாணித்து நடைமுறைப்படுத்தும் பொருட்டிலான ஒப்பந்தத்தை கையளிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.