• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
உழுந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெற்றுக் கொள்தல்
- இலங்கையின் வருடாந்த உழுத்து தேவை சுமார் 20,000 மெற்றிக் தொன்களாக இருந்த போதிலும், உழுந்து உற்பத்தி சந்தைக்கு கிடைக்கும் காலப்பகுதி காரணமாக ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் மற்றும் திசெம்பர் ஆகிய விழாக் காலங்களில் சந்தையில் உழுந்துக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது. அதற்கிணங்க, எதிர்வரும் விழாக் காலத்தில் சந்தையில் ஏற்படக்கூடிய முழு உழுந்துக்கான பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கும் உழுந்தின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. ஆதலால், தற்போது உழுந்து இறக்குமதி சம்பந்தமாக விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்கி 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விசேட வியாபார பண்டங்கள் வரியின் கீழ் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனம், தேசிய உணவு மேம்பாட்டு சபை மற்றும் இலங்கை ஹதபிம அதிகாரசபை என்பவற்றின் ஊடாக மாத்திரம் உள்நாட்டுத் தேவைக்கு அமைவாக 2,000 மெற்றிக் தொன் முழுஉழுந்து இறக்குமதி செய்யும் பொருட்டு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.