• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஶ்ரீ புத்த வருட 2568 அரச வெசாக் தின விழா
- ஶ்ரீ புத்த வருட 2568 (2024) தொடர்பிலான அரசாங்க வெசாக் தின விழாவை 2024‑05‑21 ஆம் திகதி தொடக்கம் 2024‑05‑27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தி "பிறர் செய்தவற்றையல்ல அவரவர் செய்தவை பற்றி கவனத்திற் கொள்வோம்" என்னும் தொனிப்பொருளின் கீழ் மாத்தளை மாவட்டத்தை மையப்படுத்தி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விழாவும் இறுதி விழாவும் முறையே மாத்தளை தர்மராஜ பிரிவெனா வளாகத்திலும் பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவின் மில்லவான ஶ்ரீ சுனந்தாராம விகாரை வளாகத்திலும் நடாத்தப்படவுள்ளன. அதற்கிணங்க, அரசாங்க வெசாக் விழா சார்பில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் 2024 மே மாதம் 22 ஆம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் மிருகங்களை இறைச்சிக்காக வெட்டும் இடங்களையும், இறைச்சி விற்பனை நிலையங்களையும் மதுபான சாலைகளையும் மூடுவதற்கும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.