• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Notre Dame பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- வங்காள விரிகுடா சார்ந்த சமுத்திர மற்றும் வளிமண்டலவியல் தொடர்பில் ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 2024-2028 வரை ஐந்து (05) வருட காலப்பகுதிக்கு நடைமுறையிலிருக்கும் விதத்தில் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Notre Dame பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் மூலம் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் உட்பட ஏனைய தேசிய பல்கலைக்கழகங்களினதும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களினதும் கல்வி, ஆராய்ச்சி, பட்ட மற்றும் பட்டப்பின் படிப்பு மாணவர்களின் ஆற்றல் அபிவிருத்திக்கான வசதிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தேச கருத்திட்டத்தின் மொத்த செலவானது 62,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். அதில் 60,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Notre Dame பல்கலைக்கழகத்தினாலும் வொஷிங்கடன் பல்கலைக்கழகத்தினாலும் கொடையொன்றாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Notre Dame பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.