• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
எஹெலேபொல வலவ்வ என்னும் ஆதனத்தை ஶ்ரீ தலதா மாளிகைக்கு கையளித்தல்
- 2024‑02‑19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எஹெலேபொல வலவ்வ என்னும் ஆதனத்தை ஶ்ரீ தலதா மாளிகைக்கு கையளிப்பது சம்பந்தமாக உரிய சகல தரப்பினர்களுடனும் கலந்துரையாடி அமைச்சரவைக்கு சிபாரிசுகளுடனான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கிணங்க சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் எஹெலேபொல குடும்பத்தை முன்னிலைப்படுத்தி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலவிய கண்டி இராச்சியத்தின் பெருமை மற்றும் குறித்த சூழல் பின்னணி என்பன எடுத்துக்காட்டப்படும் வகையில் இந்த கட்டடத்தில் மெழுகு சிலை அருங்காட்சியகமொன்றை தாபிப்பதனையும் அதன் மூலம் குறித்த வரலாறு தொடர்பிலான தகவல்கள் தற்கால சமூகத்தினரை ஈர்க்கும் வகையில் எடுத்துக்காட்டவும் உள்நாட்டு, வௌிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதை நோக்காகக் கொண்டும் ஶ்ரீ தலதா மாளிகையினால் எஹெலேபொல வலவ்வ சார்ந்த கருத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், குறித்த கட்டிடத்தை ஶ்ரீ தலதா மாளிகைக்கு கையளிப்பது பொருத்தமானதென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, எஹெலேபொல வலவ்வ மற்றும் அதற்கான காணியை புண்ணியபூமி உறுதி மூலம் ஶ்ரீ தலதா மாளிகைக்கு கையளிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.