• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பொருளாதர விருத்தி சட்டமூலம்
- பொருளாதர விருத்தி சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு 2024‑03‑04 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.. பொருளாதர விருத்தி தொடர்பில் தேசிய கொள்கையின் பிரதான நோக்கங்களை உள்ளடக்கி, குறித்த நோக்கங்களை வெற்றி கொள்வதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் பொருளாதர ஆணைக்குழு, இலங்​கை முதலீட்டு வலயங்கள், சர்வதேச வர்த்தக அலுவலகம், இலங்கை பொருளாதர, சர்வதேச வர்த்தக நிறுவனம் மற்றும் தேசிய உற்பத்தி திறன் ஆணைக்குழு போன்ற பிரதான நிறுவனங்களை தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி பொருளாதர விருத்தி சட்டமூலத்திற்கான ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க சட்டமா அதிபரினால் முன்வைக்கப்படும் திருத்தங்களையும் உள்ளடக்கி முறையான சட்டமூலமொன்றை துரிதமாக தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.