• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கான தேசிய டிஜிட்டல் பொருளாதார திறமுறை
- 2048 ஆம் ஆண்டளவில் உயர் வருமானம் பெறும் பொருளாதரமாக மாற்றும் நாட்டின் தொலைநோக்கினை வெற்றி கொள்வதற்கும் எதிர்பார்க்கும் பெறுபேறுகளை அடைவதற்குமாக இலங்கைக்கான தேசிய டிஜிட்டல் பொருளாதார திறமுறை மற்றும் அதன் செயற்பாட்டுத்திட்டம் என்பவற்றின் தேவை இனங்காணப்டப்டுள்ளது. அதற்கிணங்க, துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடனும் தொழில்சார் நிறுவனங்களினதும் தொழில்சார் சபைகளினதும் ஆலோசனையில் "இலங்கைக்கான தேசிய டிஜிட்டல் பொருளாதார திறமுறை - 2030” தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த திறமுறையினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.