• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தை திருத்துதல்
- 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தேசிய குறைந்தபட்ச வேதனமானது 12,500/- ரூபாவாக விதித்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய தொழில் ஆலோசனை சபையின் சிபாரிசின் மீது நியமிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் சேவை கொள்வோர் உள்ளடக்கப்பட்ட முத்தரப்புக் உபகுழுவொன்றின் மூலம் குறித்த வேதனத்தை 17,500/- ரூபா வரை அதிகரிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க தேசிய குறைந்தபட்ச வேதனமானது 12,500/- ரூபாவிலிருந்து 17,500/- ரூபாவரை 5,000/- ரூபாவால் அதிகரிப்பதற்கும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த வேதனத்தை 500/- ரூபாவிலிருந்து 700/- ரூபாவரை 200/- ரூபாவால் அதிகரிப்பதற்கும் இயலுமாகும் வகையில் 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தை திருத்தும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.