• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட பண்ட அறவீட்டு வரிச் சட்டத்தை முடிவுறுத்துதல்
- HS குறியீடு 2110 இன் கீழ் வகுப்பீடு செய்யப்பட்டுள்ள 64 பொருள் வகைகளை இறக்குமதி செய்யும் போது வசதிகளை செய்வதற்காக தனி கூட்டிணைக்கப்பட்ட வரியினை அறவிடும் பொருட்டு 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட பண்ட அறவீட்டு வரிச் சட்டத்தின் கீழ் விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியினை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகள் காரணமாக குறித்த வரி சட்டத்தை முடிவுறுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.