• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறைவரி பாதுகாப்பு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற அங்கீகாரத்தின் பொருட்டு கட்டளையொன்றை சமர்ப்பித்தல்
- இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் சுங்கத் தீர்வை தாராளமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2023‑05‑29 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2023‑07‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் சுங்கத் தீர்வை தாராளமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் 6 ஆவது தொகுதியின் கீழ் வகுப்பீடு செய்யப்பட்டுள்ள HS குறியீடு 1116 சார்பில் விதிக்கப்பட்டுள்ள சுங்க இறக்குமதி வரியின் முதலாம் ஆண்டு தவணையை நீக்கும் பொருட்டு 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறைவரி பாதுகாப்பு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கட்டளையொன்று 2023‑06‑30 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் வௌியிடப்பட்டுள்ளது. இந்த கட்டளைக்கு 2023‑10‑04 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சுங்கத் தீர்வை தாராளமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் 6 ஆம் தொகுதியின் கீழ் வகுப்பீடு செய்யப்பட்டுள்ள HS குறியீடு 1222 சார்பில் உரியதாகும் சுங்க இறக்குமதி தீர்வை அகற்றுகையை நடைமுறைப்படுத்துவதற்கு 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறைவரி பாதுகாப்பு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கட்டளையொன்று 2024‑01‑04 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் வௌியிடப்பட்டுள்ளது. இந்த கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.