• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1 தொடக்கம் 5 வரை AC ஆற்றல் கொண்ட 70 மெகாவொட் ஆற்றலைத் தாபிக்கும் பொருட்டு சூரிய சக்தி PV முறைமை மின் நிலையங்களை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
- 11 நெய்யறி துணை நிலையங்களில் 1 தொடக்கம் 5 வரை AC ஆற்றல் கொண்ட 70 மெகாவொட் ஆற்றலைத் தாபிக்கும் பொருட்டு சூரிய சக்தி PV முறைமை மின் நிலையங்களைத் தாபிக்கும் கருத்திட்டத்தின் கீழ் 20 வருட செயற்பாட்டு காலத்துடன் நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் தாபிக்கும் பொருட்டு 05 நெய்யறி துணை நிலையங்களில் 51 மெகாவொட் வழங்குவதற்குரிய ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு 2023‑10‑02 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மீதி 06 நெய்யறி துணை நிலையங்கள் சார்பில் 19 மெகாவொட் வழங்கும் பொருட்டு மீண்டும் பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. அதற்கிணங்க, முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அம்பாறை, ஹபரண, கொஸ்கம, குருநாகல், பன்னல மற்றும் வேயாங்கொடை ஆகிய நெய்யறி துணை நிலையங்கள் சார்பில் சூரிய சக்தி PV மின் நிலையங்களைத் தாபிக்கும் பொருட்டிலான ஒப்பந்தங்களுக்குரிய பொதிகளை கையளிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.