• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சர்வதேச மிளகு சமூகத்தினரால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச மாநாட்டை 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல்
- உலகில் மிளகு உற்பத்தி செய்யும் பிரதான நாடுகள் இணைந்து 1972 ஆம் ஆண்டில் ஆசிய மற்றும் பசுபிக் வலயங்கள் ஐக்கிய நாடுகளின் பொருளாதர, சமூக ஆணைக்குழுவின் கீழ் சர்வதேச மிளகு சமூகம் எனும் சர்வதேச அமைப்பொன்றை தாபித்துக்கொண்டுள்ளன. இந்த அமைப்பில் பிரதான மற்றும் நிரந்தர உறுப்பு நாடுகளாக இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகியவை செயற்படுகின்றன. இலங்கை 2002 ஆம் அண்டில் சர்வதேச மிளகு சமூகத்தில் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1999, 2006, 2012 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச மாநாட்டினை இலங்கையிலும் நடாத்தியுள்ளது. அதற்கிணங்க மிளகு உற்பத்தி மற்றும் அதனோடு தொடர்புடைய தொழிநுட்பம் மற்றும் பொருளாதர ஆராய்ச்சி முடிவுகள் ஆகியவற்றை உறுப்பு நாடுகளுக்கிடையே பரிமாற்றிக்கொள்தல், பாரம்பரிய புதிய சந்தைகளுக்கு நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்தல் மற்றும் மேம்படுத்தல், சர்வதேச சந்தையில் சுங்க தீர்வை மற்றும் சுங்க தீர்வையற்ற தடைகளை தளர்த்துவதற்கான ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்தல் போன்ற துறைகள் சம்பந்தமாக உடன்பாடு காண்பதற்குமான நோக்கத்துடன் சர்வதேச மிளகு சமூகத்தின் 52 ஆவது சர்வதேச மாநாட்டை நடப்பாண்டிலும் இலங்கையில் நடாத்தும் பொருட்டு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.