• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழுள்ள அதிவேக பாதைகளை Sahasya Investments Limited நிறுவனத்திற்கு கையளித்தல்
- அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு, அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான காணிகள், அதிவேக நெடுஞ்சாலை கடன் (உள்நாட்டு) மற்றும் உரிய பணியாட்டொகுதியினரை மேலும் வர்த்தக ரீதியாக முகாமித்துக்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து வேறாக்கி Sahasya Investments Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு 2023‑06‑26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்திலும் அதற்கான செயற்பாட்டுத்திட்டம் சார்பில் 2024‑02‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்திலும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அதிவேக பாதைகளின் நாளாந்த நடவடிக்கைகளையும் முகாமைத்துவ நடவடிக்கைகளையும் 2024‑04‑01 ஆம் திகதி தொடக்கம் முறையான முகாமைத்துவ ஒப்பந்தத்தின் கீழ் Sahasya Investments Limited நிறுவனத்திற்கு கையளிப்பதற்கும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் Sahasya Investments Limited நிறுவனமும் இணைந்து செய்யும் சட்ட மற்றும் நிதி சார் சாத்தியத்தகவாய்வின் பின்னர், உரிய சகல சொத்துக்களையும் 06 மாத காலத்திற்குள் Sahasya Investments Limited நிறுவனத்திற்கு கையளிப்பதற்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.