• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி பாடநெறிகள் மற்றும் ஏனைய வசதிகளை விருத்திச் செய்தல்
- ஒருகொடவத்தையில் அமைந்துள்ள இலங்கை - கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனமானது கொரிய இறக்குமதி, ஏற்றுமதி வங்கியினால் வழங்கப்பட்ட 2,900 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனத்தினால் நடாத்தப்படும் பாடநெறிகளும் நிறுவனத்தில் கிடைக்கக்கூடியதாகவுள்ள வசதிகளையும் மேலும் மேம்படுத்துவதன் பொருட்டு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதி கொடையொன்றை வழங்குவதற்கு கொரிய இறக்குமதி, ஏற்றுமதி வங்கியினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள குறித்த கருத்திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனம் தொழிநுட்பம், உற்பத்தி தொழிநுட்பம், உலோகங்களை சூடுபடுத்தி இணைக்கும் தொழிநுட்பம், மின் தொழிநுட்பம், இலத்திரனியல் தொழிநுட்பம், தன்னியக்க மற்றும் ரோபோ தொழிநுட்பம், திரவ வலு தொழிநுட்பம், மெக்காரொனிக் தொழிநுட்பம் உட்பட அனைத்து பாடநெறிகளினதும் பொது தேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இரு தரப்பினர்களுக்கும் இடையில் கைச்சாத்திடவுள்ள வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினதும் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.