• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
CODEGEN INNOVATIONS (PRIVATE) LIMITED கம்பனியை திறமுறை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை தொழில்முயற்சியொன்றாக குறிப்பிடுதல்
- மென்பொருள், தரவு விஞ்ஞானம், வடிவமைப்பு மற்றும் வன்பொருள் ஆகிய துறைகளின் மூலம் தொழிநுட்ப ரீதியிலான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நிபுணத்துவம் மிக்க CODEGEN குழுமத்தின் பிரிவொன்றாக CODEGEN INNOVATIONS (PRIVATE) LIMITED கம்பனியானது இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள கம்பனியொன்றாகும். குறித்த கம்பனியானது கொழும்பு துறைமுக நகர பொருளாதர ஆணைக்குழுவினால் அதிகாரம் பெற்ற ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், திறமுறை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை தொழில்முயற்சியொன்றாக குறிப்பிடுவதற்கு குறித்த கம்பனியானது விண்ணப்பித்துள்ளது. குறித்த இந்த கம்பனி 500,000 அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாக முதலீடு செய்து, 05 வருடங்களாகும் போது அண்ணளவாக 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவதற்கும், குறித்த காலப்பகுதிக்குள் அண்ணளவாக 400 தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. ஆதலால் 2023 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரத்தின் (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கான விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்குவிதிகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய இந்த கம்பனியானது விலக்களிப்புகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்குவதற்கான தகைமைகளை பூர்த்திசெய்துள்ளது. அதற்கிணங்க, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் CODEGEN குழுமத்தின் பிரிவொன்றாகிய CODEGEN INNOVATIONS (PRIVATE) LIMITED கம்பனிக்கு விலக்களிப்புகளை அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும் அதற்கான கட்டளையை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.