• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இந்திய அரசாங்கத்தின் நிதியின் கீழ் மத வழிபாட்டு தலங்கள் சார்பில் கூரையின் மேல் நிறுவும் சூரிய சக்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய பெறுகையினை வழங்குதல்
- இந்திய அரச வங்கியினால் வழங்கப்படும் 1,000 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொல்கள் கொண்ட கடன் வசதியின் கீழ் 17 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்னும் வரையறையின் கீழ் மத வழிபாட்டு தலங்களில் கூரையின் மேல் நிறுவும் சூரிய சக்தி முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்கு 2024‑01‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொருத்தமான நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, ஆறு (06) விலைமுன்வைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கூரையின் மேல் நிறுவும் சூரிய சக்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பெறுகையினை 17 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட விலயைில் M/s. Premier Energies Ltd நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.