• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2024 சிறுபோகத்தில் விவசாயிகளுக்கு பசளை மானியம் வழங்குதல்
- 2024 சிறுபோகத்தில் நெற் செய்கைக்காக யூரியா, TSP மற்றும் MOP ஆகிய இரசாயன பசளைகளை முறையே 110,298.1 மெற்றிக்தொன், 27,711.1 மெற்றிக்தொன், 33,412.4 மெற்றிக்தொன் தேவையென தேசிய உரச் செயலகமானது மதிப்பிட்டுள்ளது. அதற்கிணங்க, கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது:

* 2024 சிறுபோகத்தில் வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி என்பவற்றின் ஊடாக பசளை இறக்குமதி செய்து தனியார் துறையுடன் போட்டிகரமான அடிப்படையில் விவசாயிகளுக்கு சலுகை விலையில் பசளை விற்பனை செய்தல்.

* 2024 சிறுபோகத்தில் நெற் செய்கைக்காக விவசாயி ஒருவருக்கு பயிரிடப்பட்ட ஆகக்கூடுதலாக இரண்டு (02) ஹெக்டயார்கள் சார்பில் ஹெக்டயார் ஒன்றுக்கு 15,000/- ரூபா வீதம் கொண்ட நிதி மானியமொன்றை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வழங்குதல்.

* உரிய மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடுதல்.