• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஆரம்ப நீதிமன்ற நடவடிக்கைமுறைச் சட்டத்திற்கான திருத்தம்
- காணியொன்றுக்குரிய பிணக்கின் போது சிவில் நீதிமன்றமொன்றின் பணியான உரித்து அல்லது உடைமை உரிமையை தீர்மானிக்கும் அல்லது அது தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை வழங்கும் வரை ஆரம்ப நீதிமன்றமானது தடைசெய்தல் அல்லது இடையேற்பாட்டு நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்கின்றது. உரிமையினைத் தீர்மானிக்கும் போது மாவட்ட நீதிமன்றமொன்றினால் இறுதி தீர்ப்பு வழங்கப்படும்வரை ஆரம்ப நீதிமன்றமொன்றினால் வழங்கப்பட்ட கட்டளை அமுலில் உள்ளமையினாலும் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்மானம் இரண்டு மேன்முறையீடுகளுக்கு உட்படுகின்றமையினாலும் தவிர்க்க முடியாத காலதாமதம் உருவாவதோடு, இந்த நிலைமையின் மத்தியில் ஏதேனும் காணியொன்றுக்கு அத்துமீறி உட்பிரவேசித்த ஒருவருக்கு அல்லது அத்துமீறிய குடியிருப்பாளர் ஒருவருக்கு கணிசமான ஒருகாலப்பகுதியில் குறித்த காணியை தனது உடைமையில் வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றது. ஆதலால் 1980 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க ஆரம்ப நீதிமன்ற நடவடிக்கைமுறைச் சட்டத்தின் 66 ஆம் பிரிவின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை மிக பயனுள்ள வகையில் நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் வகையில் ஆரம்ப நீதிமன்ற நடவடிக்கைமுறைச் சட்டத்தை திருத்தம் பொருட்டு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.