• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அரசியலமைப்பை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரித்தல்
- 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குறுத்தும் சட்டத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கும் சனநாயக ரீதியிலான தேர்தலொன்றை முழுமையாக வெற்றிக் கொள்வதற்கும் நடைமுறையிலுள்ள தேர்தல் முறையினை மாற்றும் தேவை இனங்காணப் பட்டுள்ளது. இதன் பொருட்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களினதும் பிற ஏனைய தரப்பினர்களினதும் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் சிபாரிசுகளுடனான அறிக்கையொன்றை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர்களை உரிய தேர்தல் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களினால் நேரடியாக தெரிவு செய்வதற்கும் எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறைக்கு அமைவாக தேசிய அல்லது மாகாண மட்டத்தில் தெரிவு செய்வதற்கும் குறித்த இந்த குழுவுக்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, பெரும்பான்மையானோர் இதன் பொருட்டு உடன்பாடு தெரிவித்துள்ளனர். அதற்கிணங்க, தேர்தல் முறையினை திருத்துவதற்கு பிரதம அமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தேவையான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.