• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1973 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை மன்ற சட்டத்தை திருத்துதல்
- 1973 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை மன்ற சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை மன்றமானது நிலைபேறுடைய அபிவிருத்தி, சமூக ஒருங்கிணைப்பு, சமூக பொருளாதார அபிவிருத்தி, நல்லாட்சி, தொழில்முயற்சி மற்றும் சனநாயகம் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் பயிற்சி மற்றும் அறிவூட்டல் சேவைகளுக்கான நிலையமொன்றாக செயலாற்றி வருகின்றது. ஏற்கனவே இலங்கை மன்றத்தினால் சான்றிதழ் பாடநெறிகள் தொடக்கம் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகள் வரை பல்வேறுபட்ட பாடநெறிகளை நடாத்தி வருகின்றதோடு. சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இந்த மன்றத்தின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அதேபோன்று அதிகாரங்களையும் பணிகளையும் திருத்தும் தேவை எழுந்துள்ளது. அதற்கிணங்க நடவடிக்கை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை மன்ற சட்டத்தை திருத்தும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.