• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஹங்கேரி அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையில் விளையாட்டு மற்றும் விளையாட்டு கல்வி தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
- விளையாட்டு மற்றும் விளையாட்டு கல்வி போன்ற துறைகளை மேம்படுத்தி இரு தரப்புக்கும் இடையில் ஒத்துழைப்பினை விருத்திசெய்வதற்கும் பலப்படுத்துவதற்குமாக ஹங்கேரி அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதன் பொருட்டிலான வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.