• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஹைட்ரோபுளேரோகாபனை கட்டம் கட்டமாக கட்டுப்படுத்துதல் தொடர்பான மொன்றியல் சமவாயத்தின் கிகாலி திருத்தத்திற்கு ஒத்திசைவாக தேசிய பொறுப்புகளை நிறைவேற்றுதல்
- ஹைட்ரோபுளேரோ காபனை கட்டம் கட்டமாக கட்டுப்படுத்துதல் தொடர்பான மொன்றியல் சமவாயத்தின் கிகாலி திருத்தத்திற்கு இலங்கை 2018 ஆம் ஆண்டில் செயல்வலுவாக்கமளித்தது.. அதற்கிணங்க, 2024‑01‑01 ஆம் திகதி தொடக்கம் ஹைட்ரோபுளேரோகாபன் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மற்றும் பயன்பாட்டினை கட்டம் கட்டமாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கை சட்டபூர்வமாக கட்டுப்பட்டுள்ளது. குறித்த சட்ட கட்டுப்பாட்டிற்கு அமைவாக மொன்றியல் சமவாயத்தின் கிகாலி திருத்தத்திலுள்ள தேசிய பொறுப்புகளுக்கு ஒத்திசைவாகும் விதத்தில் ஹைட்ரோபுளேரோகாபன் தேறிய இரசாயனப்பொருள் மற்றும் இந்த இரசாயனப்பொருளிலுள்ள கலவை என்பவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்வதையும் பயன்பாட்டினையும் கட்டம் கட்டமாக கட்டுப்படுத்துவதற்கும் ஹைட்ரோபுளேரோகாபன் பயன்படுத்தும் கமத்தொழில், கடற்றொழில், சுகாதாரம், சுற்றுலா, போக்குவரத்து, கைத்தொழில், வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்பு போன்ற துறைகளின்பால் பிரதிகூலமான தாக்கத்தினை ஏற்படுத்தாத விதத்தில் ஹைட்ரோபுளேரோகாபன் இறக்குமதி வர்த்தகத்தின் வருடாந்த இறக்குமதியினை பங்கு முறையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குமாக சுற்றாடல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.