• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
- கடன் பெறுநர்களினால் செலுத்தத் தவறிய கடன்களை அறவிடுவதற்காக குறித்த கடன் சார்பில் ஈடுவைக்கப்பட்டுள்ள அத்தகைய ஏதேனும் ஆதனமொன்றை பகிரங்க ஏலத்தில் விற்பதற்குரியதாக வங்கிகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை 2024‑12‑15 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அதன் பொருட்டில் ஏற்பாடுகளைச் செய்வதற்குமாக 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கும் 2024‑02‑26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதோடு, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.