• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
GLOCAL FAIR மாவட்ட நடமாடும் சேவை நிகழ்ச்சித் தொடர் 2024 - ஜயகமு ஶ்ரீலங்கா
- உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் நாட்டின் தொழில் சந்தையை மீளக் கட்டமைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், மனிதவள மற்றும் தொழில் திணைக்களம், தொழில் திணைக்களம், சிரம வாசனா நிதியம் மற்றும் ஏனைய நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் அதாவது, பொது மக்களுக்கு அவர்களுடைய குடியிருப்பு பிரதேசங்களிலேயே இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் GLOCAL FAIR மாவட்ட நடமாடும் சேவை நிகழ்ச்சித் தொடரை 25 மாவட்டங்களிலும் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. புலம்பெயர் ஊழியர்கள் மற்றும் எதிர்காலத்தில் தொழில் சந்தையில் இனையவுள்ள அவர்களது இளம் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்கான வசதிகள் மற்றும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் புலம்பெயர் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்துதல், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்புகளை வழங்குதல் என்பன இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பின் பிரகாரம் இந்த அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் GLOCAL FAIR மாவட்ட நடமாடும் சேவை நிகழ்ச்சித் தொடரை நடாத்துவதற்குரியதாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.