• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை வௌியிடுதல்
- தேசிய பொருளாதாரம், பொது சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நோக்கம் கருதி 217 HS குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட 122 வகைப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டினை விதிக்கும் பொருட்டு 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் 2017 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு (தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் வௌிப்படுத்தப்பட்டுள்ளன. விரைவான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வர்த்தக போக்குவரத்திற்கு வசதியளிப்பதற்கும் அதேபோன்று உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் இறக்குமதி உற்பத்திகள் சார்பில் நியாயமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு 2017 தரப்படுத்தல் ஒழுங்குவிதிகளில் நடைமுறையிலுள்ள தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டினை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் அரசாங்க நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் வர்த்தக சபைகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடி, நடைமுறையிலுள்ள தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டினைத் திருத்தியமைத்து இற்றைப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க, தற்போது நடைமுறையிலுள்ள 2017 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு (தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை பாதிப்பேற்படாத விதத்தில் இரத்துச்செய்து, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் 2024 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு (தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை விதித்துரைக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.