• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மட்டக்களப்பு, ஓட்டமாவடி 100 மெகாவொட் சூரிய மின்சக்தி கருத்திட்டத்தை நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் தாபித்தல்
- மீள் புதுப்பித்தக்க வலுசக்தி தொழிநுட்பத்தின் மூலம் 50 மெகாவொட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட மீள் புதுப்பித்தக்க வலுசக்தி அபிவிருத்தியின் பொருட்டு ஆர்வ வௌிப்படுத்தல்களை கோருவதற்கு 2021‑08‑30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க முன்வைக்கப்பட்ட ஆர்வ வௌிப்படுத்தல்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 20 வருட செயற்பாட்டு காலத்துடன் நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில் 100 மெகாவொட் சூரிய மின்சக்தி கருத்திட்டமொன்றைத் தாபிக்கும் பொருட்டு Solar Forge Batticaloa நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.