• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் நிலத்தின் மீது தாபிக்கப்பட்ட / மிதக்கும் சூரிய சக்தி PV முறைமை மின்நிலையங்களைத் தாபித்தல்
- மாத்தறை (10 மெகாவொட்) மற்றும் வவுனதீவு (08 மெகாவொட்) நெய்யறி துணை நிலையங்கள் சார்பில் சூரிய சக்தி PV முறைமை மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு சர்வதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கிடைக்கப்பெற்றுள்ள கருத்திட்ட பிரேரிப்புகளின் அடிப்படையில் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் நிலத்தின் மீது தாபிக்கப்படும் சூரிய சக்தி PV முறைமை மின்நிலையமொன்றை மாத்தறை நெய்யறி துணை மின்நிலையத்தில் தாபிக்கும் ஒப்பந்தத்தை Mahawa Solar (Pvt) Ltd. நிறுவனத்திற்கும் Heyleys Power Ltd. நிறுவனத்திற்கும் கையளிப்பதற்கும் வவுனதீவு நெய்யறி துணை மின்நிலையத்தில் தாபிக்கும் ஒப்பந்தத்தை Capital City Holdings (Pvt) Ltd. நிறுவனத்திற்கு கையளிப்பதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.