• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணித்துண்டை சுகாதாரம் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் மேம்பாட்டு கருத்திட்டமொன்றுக்காக குத்தகை அடிப்படையில் கையளித்தல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நரஹேன்பிட்ட, கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள காணித்துண்டை சுகாதாரம் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் மேம்பாட்டு கருத்திட்டமொன்றுக்காக 50 வருட கால குத்தகை அடிப்படையில் கையளிக்கும் பொருட்டு போட்டிகரமான முதலீட்டு பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. இதன் பொருட்டு கிடைக்கப்பெற்றுள்ள பிரேரிப்புகளை மதிப்பீடு செய்ததன் பின்னர், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் 0.1929 ஹெக்டயர் விஸ்தீரணமுடைய காணித்துண்டை Ninewells Hospital Pvt. Ltd. மற்றும் Access International Pvt. Ltd நிறுவனங்களின் கூட்டிணைக்கப்பட்ட M/s NW Realty (Pvt.) Ltd, நிறுவனத்திற்கு 50 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.