• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை கட்டளைகள் நிறுவகத்திற்கும் சீனாவின் கட்டளைகள் நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சுங்க வரியற்ற வர்த்தகத்தின் போது எழும் தொழிநுட்ப ரீதியிலான இடையூறுகளை குறைப்பதற்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கும் சீனாவின் கட்டளைகள் நிர்வாகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. உரிய வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க குறிந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.