• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரியில் (NSBM) மருத்துவ பீடமொன்றைத் தாபித்தல்
- அரசாங்கத்திற்குச் சொந்தமான சுயநிதியின் மூலம் முழுமையாக இயங்கும் நிறுவனமொன்றான வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரியினால் கல்வி அமைச்சினதும் சுகாதார அமைச்சினதும் இலங்கை மருத்துவ சபையினதும் நேரடி மேற்பார்வை மற்றும் ஒழுங்குறுத்துகையின் கீழ் மருத்துவ பீடமொன்றைத் தாபிப்பதற்கும் அதன் மூலம் MBBS பட்டத்தை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த பட்டப் பாடநெறி சார்பில் வருடாந்தம் 500 உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹோமாகம ஆதார வைத்தியசாலை இந்த மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கு பொருத்தமான அரசாங்க வைத்தியசாலையாக குறிப்பிடுவதற்கு NSBM நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையைப் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையினால், அதற்கு பாதிப்பினை ஏற்படுத்தாத விதத்தில் NSBM நிறுவனத்தின் மருத்துவ பீட மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கும் அதேபோன்று பேராசிரியர் பிரிவு வசதிகள் சார்பிலும் வளங்களை பகிர்ந்துக்கொள்ளும் அடிப்படையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையை ஒதுக்குவதற்கான பொறிமுறையொன்றை தயாரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சபையினால் வெளியிடப்பட்டுள்ள மருத்துவக் கல்வித் தரங்களுக்கு அமைவாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குத் தேவையான நிதியினை வழங்குவதற்கு NSBM நிறுவனமானது உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, ஹோமாகம ஆதார வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் விடயநோக்கெல்லையின் கீழ் கொண்டுவந்து போதனா வைத்தியசாலையொன்றாக தரமுயர்த்துவதற்கு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.