• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அரசாங்க பாடசாலைகளில் தரம் 1-5 வரையிலான மாணவர்களுக்கு "பாடசாலை உணவு வேலைத்திட்டத்தை" நடைமுறைப்படுத்துதல்
- 1.08 மில்லியன் மொத்த பாடசாலை மாணவர்களை தழுவும் விததத்தில் நாட்டில் 100 கல்வி வலயங்களுக்குரிய 7,902 பாடசாலைகளில் "பாடசாலை உணவு வேலைத்திட்டம்" நடைமுறைப்படுத்தப்படுகின்றதோடு, மாணவர் ஒருவருக்கு நாளொன்றுக்கான உணவு வேளை சார்பில் 85/- ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மாற்றத்திற்கு அமைவாக உணவு வேளை ஒன்று சார்பில் ஆகக்குறைந்தது சுமார் 110/- ரூபா செலவாகின்றமை இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உத்தியயோகத்தர்கள் குழுவினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. அதேபோன்று "பாடசாலை உணவு வேலைத்திட்டம்" சார்பில் Save the Children அமைப்பின் மூலம் 2024 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட 917 பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மாணவர்களுக்கு மூன்றுவகை உணவுப் பொருட்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, உணவு வேளையொன்று சார்பில் மாணவர் ஒருவருக்கு செலவாகும் தொகையை 110/- ரூவாக அதிகரிப்பதற்கும் ஆரம்ப பிரிவு மாணவர்கள் சார்பில் 2024 ஆம் ஆண்டில் 170 நாட்களுக்கு "பாடசாலை உணவு வேலைத்திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.