• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
காலி துறைமுகத்தை வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு துறைமுக மொன்றாக அபிவிருத்தி செய்தல்
- காலி அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்புபட்ட உட்கட்டமைப்பு வசதிகதளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குரிய உட்கட்டமைப்பு வசதிகதளை செய்தல் என்பன பொருட்டு அரசாங்க - தனியார் பங்குடமை அடிப்படையில் பொருத்தமான முதலீ்ட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு ஆர்வ வௌிப்படுத்தல்களை கோருவதற்கு 2023‑08‑14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அலைதாங்கி, ஆழ் பயணிகள் நங்கூரத்தளம், பாதுகாப்பு தடுப்பு சுவர், கடல் சுவர், கால்வாய் அகழ்வு மற்றும் காணி நிலம் மீட்பு சார்ந்த சமுத்திர கட்டமைப்பு உட்பட நிரப்பப்பட்ட காணிகளில் கலப்பு அபிவிருத்தி பணிகளை நிதி வசதிகதளை பயன்படுத்தி நிர்மாணித்து, செயற்படுத்தி கையளிக்கும் அடிப்படையில் காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் உத்தேச கருத்திட்டத்திற்கு முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக ஆர்வ வௌிப்படுத்தல்களைக் கோரும் பொருட்டு / பிரேரிப்புகளை கோரும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.