• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (ஒழுங்குவிதிகளை) அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இலங்கையில் அனுமதிப்பத்திரம் பெற்ற வங்கிகளுக்கு முறையாக வங்கி அனுப்பீடுகளின் மூலம் அந்நிய செலாவணியை அனுப்பும் வௌிநாடுகளில் சேவை புரியும் இலங்கையர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரேரிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2022‑08‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 2024‑06‑30 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு 2024‑01‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, இதன் பொருட்டிலான ஏற்பாடுகளை செய்து 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.