• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாவாக பிரதேசத்தில் நூதனசாலையொன்றைத் தாபித்தல்
- 1521 ஆம் ஆண்டில் சீதாவக்க இராச்சியம் உருவாகியமை இலங்கை வரலாற்றில் முக்கிய மைற்கல்லாக இருந்தபோதிலும் இந்த இராசதானியின் பிராந்திய அடையாளத்தினை வௌிப்படுத்துவதற்கு இதுவரை இடமொன்று தாபிக்கப்படவில்லை. ஆதலால் சீதாவக்க இராச்சிய காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிங்கள துப்பாக்கி, சிங்கள வாள் உட்பட இராணுவ உபகரணங்கள், அளவை மற்றும் அகழ்வு உபகரணங்கள் போன்ற தொல்பொருட்கள் அதேபோன்று சீதாவக்க இராசதானிக்குச் சொந்தமான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் மூலமும் பொதுமக்களின் கட்டுக்காப்பில் உள்ளவற்றிலிருந்தும் இனங்காணப்பட்டுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய கற்களிலான கருவிகள், பண்டைய மனிதர்களினால் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் உணவு பற்றி தகவல்கள் அதேபோன்று மிருகங்களினதும் தாவரங்களினதும் எச்சங்கள் முறையாக பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் பொருட்டு நூதனசாலையொன்றைத் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க சீதாவாக்க பிரதான தபால் அலுவலகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தற்போது குறைவான பயன்பாட்டு நிலையில் உள்ளதுமான இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த நூதனசாலையைத் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமானவரினாலும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினாலும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.