• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கமத்தொழில் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- நவீன தொழிநுட்பம் மற்றும் புதிய செயல்திறன் என்பற்றை பயன்படுத்தி கமத்தொழில் துறையை நவீனமயப்படுத்தி பாரிய மாற்றத்திற்கும் உட்படுத்திய உலகின் ஏனைய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையின் கமத்தொழில் துறையை நவீனமயப்படுத்துவதன் பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுதிட்டத்தின் மூலம் கமத்தொழில் மற்றும் கடற்றொழில் நவீனமயப்படுத்தல் சபையை பலப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 2.5 பில்லியன் ரூபாவை பயன்படுத்தி கமத்தொழில் நவீனமயப்படுத்தல் கேந்திர நிலையத்தை தாபித்து குறுகியகால, நடுத்தவணைக்கால மற்றும் நீண்டகால திட்டங்களுக்கு அமைவாக நாடு முழுவதும் கமத்தொழில் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்டத்தின் 25 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்படும் 26 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் முன்னோடி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இரணடாம் கட்டத்தில் சகல மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளை தழுவும் விததத்தில் நாடு முழுவதும் 75 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கமத்தொழில் நவீனமயப்படுத்தல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, முதலாம் கட்டத்திற்கான முன்னோடி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்படும் பிரதேச செயலாளர் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் கமத்தொழில் நவீனமயப்படுத்தல் கேந்திர நிலையங்கள் சார்பில் 25 மில்லியன் ரூபா வீதம் 650 மில்லியன் ரூபாவும் கமத்தொழில் திணைக்களம், ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம், விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களம், கறுவா அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களுக்கு 35 மில்லியன் ரூபா வீதம் 175 மில்லியன் ரூபாவும் ஒதுக்கி கமத்தொழில் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.