• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க சமாதான நீதவான்கள் தொடர்பான (நியமனம், இடைநிறுத்தம், இரத்துச் செய்தல் மற்றும் ஒழுக்கநெறி) கட்டளை
- 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித் துறை சட்டத்தின் 45(6) ஆம் பிரிவின் கீழ் சமாதான நீதவான் பதவியை இடைநிறுத்துதல், இரத்துச் செய்தல் மற்றும் முடிவுறுத்துதல் தொடர்பான கட்டளைகளை தயாரிப்பதற்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் நீதி என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க சமாதான நீதவான்கள் தொடர்பான (நியமனம், இடைநிறுத்தம், இரத்துச் செய்தல் மற்றும் ஒழுக்கநெறி) கட்டளை மற்றும் அதன் பின்னர் இந்த கட்டளைக்காக செய்யப்பட்ட திருத்தங்கள் முறையே 2023‑11‑27 ஆம் 2024‑02‑13 ஆம் திகதிகளைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.