• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஆற்றல் மெகாவொட் 1 வீதம் கொண்ட மிதக்கும் சூரிய மின்வலு உற்பத்தியுடன் தொடர்புடைய இரண்டு (02) முன்னோடி கருத்திட்டங்களை சந்திரிக்கா குளத்தின் மேற்பரப்பிலும் கிரிஇப்பன் குளத்தின் மேற்பரப்பிலும் ஆரம்பித்தல்
- கொரிய அரசாங்கத்தின் Korea Institute for Advancement of Technology மற்றும் இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு என்பவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள கலந்துரையாடலுக்கு அமைவாக சந்திரிக்கா குளம் மற்றும் கிரிஇப்பன் குளம் என்பவற்றில் ஆற்றல் மெகாவொட் 1 வீதம் கொண்ட மிதக்கும் சூரிய மின்வலு நிலையங்களுக்கான இரண்டு (02) முன்னோடி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவத்றகுத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கருத்திட்டங்களுக்குரியதாக மின் நிலையங்கள், அனுப்பீட்டு நிலையங்கள் என்பவற்றை நிர்மாணித்தல், பராமரிப்பு தொழிலாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் சூரிய பலகங்களை பராமரித்தல் போன்ற நடவடிக்கைகள் சார்பில் எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சந்திரிக்கா குளத்தின் மேற்பரப்பிலும் செவனகல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கிரிஇப்பன் குளத்தின் மேற்பரப்பிலும் 0.99 ஹெக்டயர் வீதமான இடப்பரப்பையும் இந்த குளங்களின் ஒதுக்குப் பிரதேசங்களிலிருந்து 0.1 ஹெக்டயர் வீதமான காணித் துண்டுகளையும் வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வருடாந்தம் தேசிய மின்சார முறைமைக்கு சுமார் 3 கிகாவொட் மணித்தியாலயம் கொண்ட மின்சார உற்பத்தியினை சேர்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெறும். அதற்கிணங்க, உரிய சூரிய மின்சக்தி கருத்திட்டங்கள் இரண்டையும் நடாத்திச் செல்வதற்கு மேற்குறிப்பிட்ட குளங்களின் மேற்பரப்பையும் காணித் துண்டுகளையும் வருடாந்த உரிமப்பத்திரங்களின் மீது இலங்கை நிறைபேறுடைய வலுசக்தி அதிகாரசபைக்கு வழங்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.