• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பொது சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்களை விதித்துரைப்பது சம்பந்தமான கொள்கை கட்டமைப்பிற்கு அங்கீகாரம்
- இறக்குமதி பொருட்களுக்குரியதான வரி செலுத்துவதற்கும் பொருட்களை கொண்டு செல்வதற்கும் முன்னர் பொருட்களின் பாதுகாப்பையும் தரத்தையும் உறுதிப்படுத்துவதற்கான களஞ்சியசாலைகள் சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்கள் என அழைக்கப்படும். சுங்க கட்டளைச்சட்டத்தின் (235 ஆம் அத்தியாயம்) 69 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் கீழ் சுங்கப் பணிப்பாளர் அதிபதியின் சிபாரிசின் மீது நிதி என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்கள் என விதித்துரைக்கலாம். பொருட்குதங்களின் வசதிகளின்பால் தொழிநுட்ப ரீதியில் ஏற்பட்டுள்ள விருத்தி மற்றும் வழங்கள் செயற்பாட்டில் போட்டிகரமான சாதகத்தினை உருவாக்கும் தேவை என்பவற்றைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பொது சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதமொன்றில் கட்டாயமாக ஆகக்குறைந்த இடவசதி என்பதை திருத்தவேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சுங்க கட்டளைச்சட்டத்தின் 69 ஆம் பிரிவின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள "பொது சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்களை விதித்துரைப்பதற்கான திருத்தியமைக்கப்பட்டதும் இற்றைப்படுத்தப்பட்டதுமான கொள்கை கட்டமைப்பை" நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.