• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
முதலீட்டு நோக்கங்களுக்காக அரசாங்க மற்றும் அரசாங்க நியதிச்சட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகள் பாராதீனப்படுத்தலை முறைப்படுத்துவதற்கான காணி முகாமைத்துவ நம்பிக்கை பொறுப்பினை தாபித்தல்
- நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 82 சதவீதமானவற்றின் உரிமை அரசாங்கத்திற்கு சொந்தமானதோடு, இந்த காணிகளை பாதுகாப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் பொதுவான அணுகுமுறைகளை பின்பற்றாமல் செயலாற்றுவதன் காரணமாக அரசாங்க காணிகளை முதலீட்டு நோக்கங்களுக்காக விடுவிக்கும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளமை தெரியவருகின்றது. ஆதலால், புதிய கைத்தொழில் மற்றும் சேவைகளை உருவாக்குதல், புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் என்பன பொருட்டு பொருத்தமான வாய்ப்புவளத்துடன் கூடிய காணிகளை இனங்காணும் சந்தர்ப்பம் முதல் முதலீட்டாளர்களுக்கு வௌிப்படைத் தன்மையிலான முறையினைப் பின்பற்றி முறையாக காணிகளை விடுவித்தல் வரை உரிய அதிகாரங்களைக் கொண்ட பொறிமுறையொன்றைத் தாபிப்பது அத்தியாவசியமாகவுள்ளது. அதற்கிணங்க, அரசாங்கத்திற்கும் நியதிச்சட்ட நிறுவனங்களுக்கும் சொந்தமான காணிகளை முதலீட்டாளர்களுக்கு விடுவிப்பதற்குரியதாக பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு சனாதிபதியின் செயலாளரின் தலைமையில் உரிய சகல அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட காணி முகாமைத்துவ நம்பிக்கை பொறுப்பினை தாபிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.