• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
- கடந்த சுமார் 3 வருட காலமாக நிலவும் பொருளாதார பின்னடைவு காரணமாக பாரிய அளவிலான, நடுத்தர அளவிலான மற்றும் சிறிய அளவிலான உள்நாட்டு வர்த்தகர்களுக்கு அவர்களுடைய தொழில்முயற்சிகளை நடாத்திச் செல்வதில் கடும் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. தற்போது பொருளாதாரமானது மீண்டும் குறிப்பிடத்தக்க விதத்தில் பலமடைந்து வருகின்றதோடு, அதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் பொதுத் திறைசேரியினால் எடுக்குப்பட்டு வருகின்றன. ஆயினும், கடந்த காலப்பகுதியில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் அவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகளுக்காக வங்கிகளின் மூலம் பெறப்பட்ட கடன்கள் தொடர்ந்தும் உரிய முறையில் செலுத்தி முடிக்காமை சம்பந்தமான பிரச்சனைகள் நிலவுகின்றமை பல்வேறு தரப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் கடன் செலுத்த தவறியுள்ளமை காரணமாக வர்த்தகர்களில் கணிசமானோரின் சொத்துக்கள் நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளை பின்பற்றி வங்கிகள் உடைமையாக்கிக்கொண்டு, ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக வர்த்தக துறையில் எழக்கூடிய நெருக்கடியான நிலைமையினைத் தீர்த்து வங்கி முறைமைக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் உரிய கடன்களை செலுத்துவதற்கு குறிப்பிட்ட சலுகை காலமொன்றை வழங்குவது பொருத்தமானதென தெரியவருகின்றது. அதற்கிணங்க கடன் செலுத்தாமை காரணமாக வங்கிகள் கடனாளிகளின் சொத்துக்களை சுவீகரிப்பதற்காக பின்பற்றும் வழிமுறையினை 2024‑12‑15 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் இதன் பொருட்டு தேவையான சட்ட ஏற்பாடுகளை விதிக்கும் பொருட்டு 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆம் பிரிவை திருத்துவதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.