• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கமத்தொழில் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நிலவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் 2024 ‑ 2026 காலப்பகுதியின் சார்பிலுள்ள செயற்பாட்டுத்திட்டத்தில் கைச்சாத்திடுதல்
- கமத்தொழில் துறைசார் ஒத்துழைப்பின் பொருட்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் 2006‑11‑27 ஆம் திகதியன்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இரு தரப்பினரினதும் உடன்பாட்டின் மீது கமத்தொழில் துறையின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பினை ​மேம்படுத்துவதற்கும் 2010‑2011, 2017-2019 மற்றும் 2022 - 2024 காலப்பகுதிக்கு உரியதாக செயற்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, 2024-2026 காலப்பகுதியின் சார்பில் புதிய செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் சோசலிச குடியரசின் கமத்தொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்பிற்கான திணைக்களமும் இலங்கையின் கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கை பேரவையும் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன. அதற்கிணங்க, இந்த செயற்பாட்டுத் திட்டத்தை இரு தரப்புக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.