• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் கொழும்பு துறைமுகத்தில் எல்லை சுகாதார திறன்களை மேம்படுத்துதல்
- இலங்கையின் பொருளாதாரம் பிரதானமாக சர்வதேச சுற்றுலா நடவடிக்கைகள், வர்த்தக சுற்றுலா மூலம் ஈட்டப்படும் வருமானத்தின் மீது தங்கியுள்ளமையினால் தடையின்றி நாட்டிற்கு உள்வரும் இடங்களை செயற்படுத்தும், சுற்றுலா பயணிகளின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் மற்றும் பயணங்கள் சம்பந்தமாக சர்வதேச சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைவான விதத்தில் உள்நாட்டு எல்லைகளினூடாக உள்வரும் இடங்களை ஏற்பாடு செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உள்வரும் இடங்களில் நாட்டு எல்லை சார்ந்த சுகாதார முன் ஆயத்தம், தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்கு நேரடியாக பங்களிப்பு செய்தல் மற்றும் பல்வேறுபட்டு அவசர சுகாதார நிலைகளின் போது அனைத்து பயணிகளின், பணியாளர்களின், உள்வரும் இடங்களிலுள்ள பணியாளர்களின் பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துதல் என்பன சார்பில் யப்பான் அரசாங்கம் புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் ஊடாக 1,170 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட கொடையொன்றை வழங்கியுள்ளது. இந்த கொடையின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகம் அதேபோன்று மாலைத்தீவு சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றிலுள்ள வசதிகள் சர்வதேச நடைமுறைகளுக்கும், சிபாரிசுகளுக்கும் தரங்களுக்கும் அமைவாக மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சுகாதார அமைச்சு, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், விமான நிலையம், விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை என்பவற்றின் ஒருங்கிணைப்புடன் உரிய கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை செய்யும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.