• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தேசிய சுற்றுலா கொள்கை
- தேசிய சுற்றுலா கொள்கை வரைவானது 2023‑09‑04 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, அச் சந்தர்ப்பத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றினால் மேலும் குறித்த வரைவானது மீளாய்வு செய்யப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, சனாதிபதியின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவொன்றினால் சுற்றுலா தொழிலின் பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகளை இனங்கண்டு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய போக்குகளையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் சிபாரிசுகளுக்கு அமைவாக உத்தேச தேசிய சுற்றுலா கொள்கையானது வரையப்பட்டுள்ளது. இந்த கொள்கையினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.