• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1912 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பகிரங்க அரங்காட்டல் கட்டளைச் சட்டத்தை நீக்கி பகிரங்க அரங்காட்டல் வகைப்படுத்தல் சபையொன்றைத் தாபிப்பதற்கான சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
- பகிரங்க அரங்காட்டல் பற்றி தற்போது 1912 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பகிரங்க அரங்காட்டல் கட்டளைச்சட்டம் அமுலிலுள்ளதோடு, சர்வதேச போக்குகள் மற்றும் தரநியமங்களுக்கு அமைவாகவும் படைப்புகளின் சுதந்திரத்தை முழுமையாக பாதுகாக்கும் வகையில் இலங்கை சமூகத்திற்கு பொருத்தமான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க பகிரங்க அரங்காட்டல் கட்டளைச் சபையின் முன்னாள் தலைவர் சமன் அதாவுதஹெட்டி அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் புதிய சட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளும் பொருட்டு ஆரம்ப வரைவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க 1912 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பகிரங்க அரங்காட்டல் கட்டளைச் சட்டத்தை நீக்குவதற்கும் பகிரங்க அரங்காட்டல் வகைப்படுத்தல் சபை சட்டம் என்னும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் புதிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்ட புதிய சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் வெகுசன ஊடக அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.