• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஆயுள்வேத கோவைக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல்
- 2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஆயுள்வேத (திருத்த) சட்டத்தின் ஊடாக திருத்தப்பட்ட 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டத்தின் 77 ஆம் பிரிவின் பிரகாரம் ஆயுள்வேத கோவை குறித்துரைக்கப்பட்டு, கட்டளைகள் தயாரிக்கப்படவேண்டியுள்ளது. அதற்கமைய சட்டத்தின் நோக்கங்களை அடைந்து நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகளை பூர்த்திசெய்வதற்கு இயலுமாகும் வகையிலும் சமகால தேவைகளுக்கு பொருத்தமான விதத்தில் சுதேச வைத்திய துறையின் மேம்பாட்டிற்காக சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, ஆயுள்வேத கோவை வரையப்பட்டுள்ளது. சட்டவரைநரினால் குறித்த வரைவானது பரிசீலனை செய்யப்பட்டு தொழிநுட்ப உள்ளடக்கங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்கள் சரியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வரைவு ஆயுள்வேத கோவையை வௌியிடுவதன் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.