• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சில நீதிமன்றங்களில் சட்டப் பணிகள் மற்றும் அறிக்கைகளை ஆங்கில மொழியில் பேணுதல்
- வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான விடய நோக்கெல்லைக்குரிய விடயங்கள் முக்கியமாக ஆங்கில மொழி பயன்படுத்தப்படுவதோடு, அவ்வாறான விடயங்கள் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும்போது குறிப்பிடத்தக்க செலவினை ஏற்க வேண்டி நேரிடுகின்றது. அத்துடன் கணிசமான காலமும் இதற்காக எடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக வர்த்தக பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கு அதிக காலம் எடுக்கின்றமை முதலீட்டாளர்களை கவர்வதில் பாதகமான தாக்கத்தை செலுத்துகின்றது. இந்த நிலைமை நாடொன்றில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சாத்தியமான நிலைமை பற்றி சுட்டிக்காட்டும் நிரற்படுத்தலில் இலங்கை கீழ் நிலையில் இருப்பதற்கு காரணமாய் அமைந்துள்ளது. இந்த நிலமைக்கு தீர்வொன்றாக இனங்காணப்படும் நீதிமன்றங்களின் சகல பணிகள் அல்லது குறித்துரைக்கப்படக்கூடியவாறான பதிவோடுகள் மற்றும் சட்டப் நடவடிக்கைகள் சார்பில் ஆங்கில மொழியினை பயன்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக் கொள்ளும் ஏற்பாடு அரசியலமைப்பின் 24(4) உறுப்புரையிலள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சரவையின் ஒருப்பாட்டுடன் நீதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் வௌியிடுவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.