• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை பொலிஸ் பரிசோதகர் மற்றும் கனிஷ்ட தரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்குதல் மற்றும் பொலிஸ் சார்ஜன் / பொலிஸ் கொன்ஸ்ரபில் சார்பில் சப்பாத்து சோடிகள் வழங்குதல் என்பவற்றுக்கான பெறுகை
- இலங்கை பொலிஸ் பரிசோதகர் மற்றும் கனிஷ்ட தரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்குவதற்காக 732,000 மீற்றர்கள் கொண்ட துணி மற்றும் பொலிஸ் சார்ஜன் / பொலிஸ் கொன்ஸ்ரபில் சார்பில் 70,000 சப்பாத்து சோடிகள் என்பன 2024 ஆம் ஆண்டில் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கை பொலிசுக்கு 2024 ஆம் ஆண்டு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டின் மூலம் தேசிய ரீதியில் போட்டிகரமான செயற்பாட்டினைப் பின்பற்றி குறித்த துணிகளையும் சப்பாத்துக்களையும் கொள்வனவு செய்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.