• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) 2024 ஆம் ஆண்டிற்கான IORA தினத்தை நினைவு கூர்தல்
- "எதிர்கால சந்ததியினருக்கு நிலைபேறுடைய இந்து சமுத்திரம்" என்னும் தொனிப்பொருளின் கீழ் இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான IORA தினத்தை நினைவு கூரும் விழாவானது இலங்கையின் தலைமையில் 2024‑03‑10 ஆம் திகதியன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள தெனவும் உறுப்பு நாடுகளின் இராஜதந்திர தூதரகங்கள், கலந்துரையாடல் பங்குடமை நாடுகள், கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் முகவராண்மை உள்ளிட்ட நாட்டின் சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகளவான பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் இவ்விழா நடாத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனக் குறிப்பிட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.